334views
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டத்தில் திருட்டு வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் திருட்டு வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 30.09.2022 ஆம் தேதி முதல் தற்போது வரை மதுரை மாவட்டம் திருமங்கலம் உட்கோட்டம் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் திருடு போனது சம்பந்தமாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. 24.11.2022 ம் தேதி மேற்படி திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட இரண்டு நபர்களை காவல் துறையினால் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து _ 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மேற்படி வழக்கின் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.




