தமிழகம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் போடி அணி வெற்றி.

69views
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திருவேங்கடம் நினைவு கூடைப்பந்து குழு நடத்தும் முதலாம் ஆண்டு மாவட்ட அளவில் ஆண்களுக்கான கூடைப் பந்தாட்ட போட்டிகள் கடந்த மூன்று நாட்களாக பெரியகுளம் பாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி விளையாட்டு திடலில் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, போடி, கம்பம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 14 அணிகள் பங்கேற்றது. போட்டிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதலில் நாக்கவுட் முறையிலும், நான் அவுட் முறையில் வெற்றி பெற்ற அணிகளுக்கு லீக் சுற்றும் முறையிலும் போட்டிகள் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் போடி கூடை பந்தாட்ட கழகமும், பெரியகுளம் திருவேங்கடம் குடைப்பந்தாட்ட கழகமும் போட்டியிட்டதில் போடி கூடை பந்து கழகம் 84க்கு 77 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று போடி கூடை பந்தாட்ட கழக அணி கோப்பையை வென்றது.
முன்னதாக நடைபெற்ற மூன்று மற்றும் நான்காம் இடத்திற்கான போட்டியில் பெரியகுளம் வடுகபட்டி கூடை பந்தாட்ட கழக அணிக்கும் தேனி எல் எஸ் மில் கூடை பந்தாட்ட கழக அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் தேனி எல் எஸ் மில் அணி 66க்கு 58 என்ற புள்ளிகளை அடிப்படையில் மூன்றாம் இடத்தை பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பெரியகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் கீதா பரிசுத்தொகை மற்றும் கோப்பைகளை வழங்கினார்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!