தமிழகம்

உசிலம்பட்டிப் பகுதியில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி.கிலோ ரூ5க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை.

294views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரியசெம்மேட்டுப்பட்டி நடுப்பட்டி கன்னியம்பட்டி கள்ளபட்டி உச்சப்பட்டி பொட்லுப்பட்டி உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் 300க்கும் மேற்ப்பட்ட ஏக்கரில் விவசாயிகள் வெண்டைக்காய் பயிரிட்டுள்ளனர்.வெண்டைக்காய் தற்போது விளைந்து நல்ல விளைச்சல் ஏற்ப்பட்டுள்ளன.
இவை விற்பனைக்காக விவசாயிகளால் உசிலம்பட்டி தினசரி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகின்றன.கடந்த வாரம் வரை கிலோ ரூ20 முதல் ரூ30 வரை கொள்முதல் செய்யப்பட்ட வெண்டைக்காய் வரத்து அதிகமானதால் தீபாவளி பண்டிகை முதல் கிலோ ரூ 4 முதல் ரூ5 வரை கொள்முதல் செய்யப்படுகின்றன.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த விலையில் விற்றால் தங்களின் கூலி வண்டி வாடகைக்கூட கட்டாத சூழ்;நிலை உருவாகியுள்ளது.எனவே அரசு கவனத்தில் எடுத்து வெண்டைக்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் கிராமப்பகுதிகளுக்கு அவ்வப்போது சென்று எந்த மாதத்தில் எதை பயிரிட வேண்டும் என விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
இதன் மூலம் ஒரே நேரத்தில் அனைத்து விவசாயிகளும் ஒரே பயிர் வகைகளை பயிரிட்டு விவசாயிகள் நஷ்டமாவதை தடுக்க முடியும் எனக்கூறினர்.
செய்தியாளர்: உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!