தமிழகம்

வேலூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன், உடற்தகுதி சங்க பொதுக்குழு கூட்டம் : தலைவராக கராத்தே ஜெ.குமார் தேர்வு

14views
வேலூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் மற்றும் உடற்தகுதி சங்க பொதுக்குழு கூட்டம் காட்பாடி ரெயில்வே திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. காட்பாடி ராஜா தலைமை தாங்கினார். சங்க பொதுச்செயலாளர் சி.ஜெ.குமார் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் மற்றும் உடற்தகுதி சங்க பொதுச்செயலாளர் டி.கே.குருநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அப்புபால் பாலாஜி, வேலூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் மற்றும் உடற்தகுதி சங்க விளையாட்டுக்குழு தலைவர் ஜி.விசுவநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆணழகன் மற்றும் உடற்தகுதி சங்க புதிய தலைவராகவும், தமிழ்நாடு மாநில சங்க துணைத்தலைவராகவும் கராத்தே ஜெ.குமார் தேர்வு செய்யப்பட்டார். இதில், தமிழ்நாடு ஆணழகன் போட்டியை அடுத்தாண்டு மார்ச் மாதம் வேலூரில் நடத்துவது, சங்க உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வேலூர் மாவட்ட சங்க பொருளாளர் எம்.ஆர்.பாலாஜி நன்றி கூறினார்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!