தமிழகம்

வேலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாவட்ட கூட்டம் , தீர்மானங்கள் நிறைவேற்றம்

36views
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள கொசவன்புதூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் சீனிவாசன், பொருளாளர் மேனகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் கோபி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
நடைபெற உள்ள+2 தேர்வில் அனைத்து பாடத்திற்கான கால இடைவெளி சமமாக இல்லாத நிலை உள்ளது. கணினி பாடங்களுக்கு 2 நாள் விடுமுறையும் மற்ற பாடங்களுக்கு 4,5 நாட்கள் இடைவெளிவிடுமுறை விடப்பட்டுள்ளது. ஆகவே தேர்வு அட்டவணையில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று அரசை கேட்டுகொள்வது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!