தமிழகம்

தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர்கள் சங்க மாநில கெளரவத் தலைவர் சி.ராஜவேலு செய்தியாளர் சந்திப்பு

28views
வேலூர் வள்ளலாரின் உள்ள தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர் சங்க மாநில அலுவலகத்தில் கெளரவத் தலைவர் சி.ராஜவேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் ரவிச்சந்திரன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் காவலராக பணியாற்றி வருகிறார். அவர் பணியின்போது சீருடை அணிவதில்லை, வருகை பதிவேட்டில் 5 நாட்கள் மட்டுமே பணியாற்றுகிறார். இவர் வேலை உதயேந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அம்பலூர் குடிநீர்தேக்கத் தொட்டியின் இரவு காவலர் பணி ஆகும். ஆனால் அங்கு போகாமல் பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு இளநிலை உதவியாளர் சொல்லும் வேலையை செய்துவருகிறார். உ.ம்.: வரித்தண்டலர் வேலையை செய்துவருகிறார். அதற்கு சரியான கணக்குகள் பராமரிப்பது இல்லை, குடிநீர் குழாய் இணைப்புக்குரூ.25,000 வரை பெற்றுக்கொண்டு இணைப்பு தருவதில்லை,
எனது (சி.ராஜவேலு) நடவடிக்கை மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பேரூராட்சிகளின் இயக்குநர், சென்னை, அவர்கள் மீது CONTEMPT CASE போட்டவுடன் இயக்குநரிடம் ஆஜராகி மன்னிப்பு கோரினார். இவரின் முறையற்ற நியமனம் என்பதை உறுதி செய்கு பணிநீக்கம் செய்தார். அவர்களை பணியமைர்த்தியை செயல் அலுவலர்கள் விஜயா, ஆனந்தன் ஆகியோருக்கு தண்டனை பெற்று பதவி உயர்வு சலுகைகள் பறிக்கப்பட்டது. ஆனால் செயல் அலுவலர் ராஜலட்சுமி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவரை பணி அமர்த்தி உள்ளார். இவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!