தமிழகம்

வேலூரில் இந்திய தொலைதொடர்பு துறைசார்பில்(பி.எஸ்.என்.எல்) விழிப்புணர்வு பேரணி மற்றும் இரத்ததான முகாம்

45views
வேலூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள இந்திய தொலைதொடர்பு நிறுவனம் (BSNL)பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் வணிக பிரிவு சார்பில் அரோக்கியமே செல்வம் என்ற பொருளில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கோட்ட பொதுமேலாளர் இராஜி கொடியசைத்து துவக்கிவைத்தார். இதில் துணை பொதுமேலாளர் அசோக்நாயக், மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், உரிமம் பெற்ற விற்பனை முகவர்கள், ஓய்வூதியதாரர்கள் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். BSNL நவீன தொழிற்நுட்பம், டிஜிட்டல், பிராட்பேண்ட் குறித்த விழிப்புணர்வு பதாகையுடன் ஊர்வலத்தில் பிடித்து சென்றனர்.  பின் அலுவலக வளாகத்தில் சிஎம்சி மருத்துவமனையுடன் இணைந்து BSNL அலுவலர்கள், ஊழியர்கள் இரத்ததான முகாமில் பங்கேற்றனர்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!