தமிழகம்

வேலூர் கோட்டையில் நடந்த முதல் சுதந்திர போரின் 220-ம் ஆண்டு விழா, நினைவு தூணுக்கு மலர் அஞ்சலி செலுத்திய முக்கிய பிரமுகர்கள்

13views
வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கில சிப்பாய்களுடன் இந்திய சிப்பாய்களும் தங்கி கோட்டையில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வந்தனர். இந்து-முஸ்லீம் சிப்பாய்களின் மத கோட்பாட்டிற்கு எதிராக ஆங்கிலேயர்கள் கட்டுப்பாடுகளை விதித்தனர். இதை எதிர்த்த இந்திய சிப்பாய்கள் 1806 ஜூலை10-ம் தேதி ஆங்கிலேயருக்கு எதிராக முழக்கமிட்டு சுமார் 100 ஆங்கிலேயசிப்பாய்களை கொன்றனர். உடனடியாக ஆற்காட்டிலிருந்து ஆங்கிலேய போர்படைகர்னல் கில்லிங்லீ தலைமையில் வந்த படை கோட்டையை முற்றுகையிட்டு சுமார் 150-க்கும் மேற்பட்ட இந்திய சிப்பாய்களை கொன்றுகுவித்தனர். இதுவே இந்திய வரலாற்றில் முதல் சுதந்திர போரின் முன்னோட்டம் என்று கருதப்பட்டது. சிப்பாய் புரட்சி என்றும் வரலாற்றில் எழுதப்பட்டது.
1806-ல் நடந்த இந்த புரட்சி 2026-ல் – 220 ஆண்டில் அடி எடுத்து வைத்தது. இதற்காக வேலூர் மக்கான் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவு தூணுக்கு ஆட்சியர் லீலா மற்றும் முப்படை முன்னாள் அதிகாரிகள், வீரர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நினைவு தூணுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!