தமிழகம்

வேலூர் மாவட்ட அமமுக செயலாளர் சதீஷ்குமார் அரசியல் கட்சி தலைவர்களுக்கு மாலை, மரியாதை

66views
வேலூர் மாவட்ட மாநகர அமமுக செயலாளராக சதீஷ்குமாரை, கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நியமனம் செய்தார். இதனையெடுத்துவேலுர் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அண்ணா, எம்ஜிஆர்,பிடிஓ அலுவலக வளாகத்தில் உள்ள ஈவெரா, மக்கான் சிக்னல் அருகில் உள்ள அம்பேத்கார். காட்பாடி ஓடைப் பிள்ளையார்கோயில் அருகில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா படம், சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஞானசேகர், அமைப்பு செயலாளர்கள் தருமலிங்கம், ராஜா,வேலூர் புறநகர் செயலாளர் பூவாலன், மாவட்ட அவைத்தலைவர் கமலநாதன், பொருளாளர் சுந்தரமூர்த்தி, காட்பாடி மத்திய ஒன்றிய செயலாளர் கொடுங்கந்தாங்கல் பாபு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கலையரசன், மாணவர் அணிசெயலாளர் சத்தியராஜ், அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜேஷ், தகவல் தொழிற்நுட்ப பிரிவு செயலாளர்கள் ஏழுமலை, உமா. மாற்றுத்திறனாளி அணி செயலாளர் சாமுவேல், டைலர் ரவி, ஐஸ் வெங்கடேசன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!