தமிழகம்

வேலூர் மாவட்டத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ல் மொத்தம் உள்ள 5-ல் அதிமுக 3, திமுக 2 – ல் வெற்றிபெற வாய்ப்பு

151views
வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம்(தனி) கே.வி.குப்பம் (தனி) ஆகிய 5 தொகுதிகள் உள்ளன. இதில் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுகவில் மீண்டும் அமைச்சர் துரைமுருகன், மீண்டும் அதிமுகவில் ராமு, வேலூரில் திமுக சார்பில் மீண்டும் கார்த்திகேயன், அதிமுக சார்பில் அப்பு, அணைக்கட்டில் மீண்டும் திமுக சார்பில் நந்தகுமார், அதிமுக சார்பில் மீண்டும் வேலழகன்,குடியாத்தத்தில் திமுக கூட்டணியில் தேமுதிகவில் பிரதாப், அதிமுகவில் பபிதா, கே.வி.குப்பத்தில் அதிமுகவில் புரட்சி பாரதம் சார்பில் மீண்டும் ஜெகன்மூர்த்தி, திமுக சார்பில் ராஜேஸ்வரியும் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.
கடும் வெய்யிலில் தீவிர பிரச்சாரம் செய்துவருகின்றனர். இந்த 2026 – தேர்தலில் பல வாக்காளர்களிடம் வெற்றி, தோல்வி குறித்து கேட்டபோது, வேலூரில் அதிமுக, காட்பாடியில் அதிமுக, அணைக்கட்டில் திமுக, குடியாத்தத்தில் அதிமுக, கே.வி.குப்பத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகின்றது.
இதில் சில சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது. தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளதுரைமுருகன், கார்த்திகேயன், ஜெகன்மூர்த்தி ஆகியோர் வெற்றி பெற வாய்ப்பு குறைவாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மீண்டும் அதிகரித்தால் சில மாற்றம் ஏற்படலாம். இதற்கான சரியான முடிவு மே-4-ம் தேதி கிடைக்கும்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!