தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் துரைமுருகனின் வேட்பாளர் அறிமுக கூட்டம்

114views
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் துரைமுருகனின் வேட்பாளர் அறிமுக கூட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.
வேலூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்/எம்.பி.கதிர் ஆனந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் நரசிம்மன், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், துணை மேயர் சுனில்குமார், பகுதி செயலாளர்கள் வன்னியராஜா, பரமசிவம், துணைசேர்மன் சரவணன், கூட்டணி கட்சியான காங்கிரஸ், தேமுதிக, விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அதேப்போல் நேற்று புதன்கிழமை காலையில் காட்பாடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட ஒட்டநேரியில் தனது தேர்தல் பிரசாரத்தை துரைமுருகன் துவக்கினார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!