தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி சட்டமன்ற அதிமுக வேட்பாளர் ராமு அறிமுக கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அதிமுக அமைச்சர் வீரமணி

171views
வேலூர் மாவட்டம் காட்பாடியில் அதிமுக சார்பில் வி.ராமு, வேலூரில் எஸ்ஆர்கே அப்பு. குடியாத்தத்தில் பபிதா ஆகியோர் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர். காட்பாடி சட்டமன்ற வேட்பாளர் வி.ராமு அறிமுக கூட்டம் சித்தூர் பஸ் நிலையம் அருகில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நடந்தது. இதில் முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு பேசினார். இதில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக சார்பில் வேட்பாளர் வி.ராமு, வேலூர் வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு. மாவட்ட பொருளாளர் மூர்த்தி, காட்பாடி ஒன்றிய செயலாளர்கள் சுபாஸ், சின்னதுரை,காட்பாடி பகுதி செயலாளர் நாராயணன், மாநகர அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவர் பிரகாசம், முன்னாள் சோளிங்கர் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், காட்பாடி மத்திய விவசாய அணிசெயலாளர் மோகன்பாபு, வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், பிஜேபி சார்பில் மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயிணி, மாவட்ட தலைவர் தசரதன், பாமக சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் சண்முகம், மாவட்ட செயலாளர் ஜெகன்,அமமுக சார்பில் காட்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சதீஷ்குமார், காட்பாடி மத்திய ஒன்றிய செயலாளர் பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதற்கு முன்பாக காட்பாடி ஓடைப் பிள்ளையார்கோயில் எதிரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!