தமிழகம்

ஐஎஃப்எஸ் நிதி நிறுவன இயக்குனர்களின் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

99views
வேலூர் மாவட்டம் காட்பாடி ஐஎப்எஸ் நிதி நிறுவன இயக்குனர்களின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் அதிக வட்டி தருவதாக கோரி பொதுமக்களிடம் சுமார் 6000 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் இந்நிலையில் நேற்று காலை முதல் ஐஎஃப்எஸ் நிதி நிறுவன இயக்குனர்களின் உறவினர்கள் வேலூர் மற்றும் காட்பாடி மற்றும் மேல்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அவர்களது இல்லங்களில் அதிரடி சோதனையில் அமலாக்கத்துறை ஈடுபட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் பொதுமக்கள் குவிந்து வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
இந்த ஐஎஃப்எஸ் நிதி நிறுவன மோசடியில் காவல்துறையைச் சேர்ந்த உயர் பதவியில் உள்ள அதிகாரிகள் காவல் ஆய்வாளர்கள் இதில் ஈடுபட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது ஆனால் அவர்கள் பணத்தை முதலீடு செய்து விட்டு திருடனை தேள் கொட்டியது போன்று சத்தம் போடாமல் அமைதி காத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது திருடர்களை பிடித்து தண்டிக்க வேண்டிய காவல்துறை இப்படி பணத்துக்கு ஆசைப்பட்டு தனியார் நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இதில் வேலூரில் முன்னாள் டி ஐ ஜி யாக பணியாற்றிய ஆனி விஜயா மற்றும் காட்பாடி காவல் ஆய்வாளராக பணியாற்றிய ஆனந்தன் உள்ளிட்ட பலர் இந்த ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!