தமிழகம்

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தீ விபத்து ரூ. 1 கோடிக்கு மேல் சேதம்

79views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்முண்டியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கிவருகிறது.  இங்கு பகாஸ் என்கின்ற கரும்பு சக்கை மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
கரும்பு சக்கை இரும்பு கன்வேயர் மூலம் அனுப்பி எரிக்கப்பட்டு அதன்மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.  அந்தகன்வேயரில் வெல்டிங் மூலம் ரிப்பேர் செய்தபோது தீ பொறிபட்டு கரும்புசக்கை எரிந்து இரும்பு தளவாடங்கள் எரிந்தது.  காட்பாடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.  ரூ.1 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாக சர்க்கரை ஆலைத் தலைவர் எம்.ஆனந்தன் தெரிவித்தார்.  இந்த ஆண்டு கரும்பு அரவை எந்தவித பிரச்னை இன்றி நடைபெறும் என்றும் அவர் மேலும் கூறினார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!