தமிழகம்

வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் ரூ 77 லட்சமதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடத்தை காணொளி மூலம் திறந்த முதல்வர்

96views
வேலூர் தொரப்பாடியில் அரசு தந்தைபெரியார் பொறியியல் கல்லூரி இயங்கிவருகிறது. அமைப்பியல் துறை 2 -வது தளத்தில் ரூ 77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் ஆய்வக கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் துவக்கிவைத்தார். கல்லூரியில் குத்து விளக்கை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கிவைத்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் வேலூர் கார்த்திகேயன், அணைக்கட்டு நந்தகுமார். கல்லூரி முதல்வர் அருளரசு. பேராசிரியர்கள் பிரவீன்ராஜ், கலைவாசன், துறையை சார்ந்த உதவி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!