தமிழகம்

கடந்த 1982 ஆம் ஆண்டு அன்றைய அதிமுக ஆட்சி காலத்தில் , பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் உயிரிழந்த மூன்று பேர்களுக்கு வீரவணக்க அஞ்சலி .

56views
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 3 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.  ஒன்றிய அரசின் அடாவடி போக்கைக் கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்துதல்,வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்த அளவு விலை நிர்ணயச் சட்டத்தை நிறைவேற்ற கோரியும், வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க வலியுறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
மேலும், கடந்த 1982 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சிக்காலத்தில், நாகை மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது காவல் துறை துப்பாக்கி சூடு நடத்தியது . இந்த துப்பாக்கி சூட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர் .
அவர்களது நினைவைப் போற்றும் வகையில் , அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செய்தனர். இதைத்தொடர்ந்து ஒன்றிய அரசின் அடாவடி போக்கை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தக்கோரியும், தொழிலாளர்கள் விரோதப்போக்கை கடைபிடிக்கும் மோடி அரசை கண்டித்தும் , வேலை இல்லாத திட்டத்தை ஒழிக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!