இலக்கியம்நிகழ்வு

‘வளரி’ பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பின் சார்பில் 15-ஆம் ஆண்டு விழாவும், கவிப்பேராசான் மீரா விருது வழங்கும் விழாவும் கும்பகோணத்தில் நடைபெற்றது

158views
கடந்த செப்டம்பர் 17, ஞாயிறன்று கும்பகோணம் ரோட்டரி அரங்கில் ‘வளரி’ பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பு ஒருங்கிணைத்த 15-ஆம் ஆண்டு விழாவும், கவிப்பேராசான் மீரா விருது வழங்கும் விழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பேராசிரியர் ஆதிரா முல்லை தலைமை தாங்கினார். ஆசிரியர் சுதா மாணிக்கம் அனைவரையும் வரவேற்றார். ‘வளரி’ முதன்மை ஒருங்கிணைப்பாளர் கவிஞர் அருணாசுந்தரராசன் தொடக்கவுரையாற்றினார்.
விழாவில், கவிப்பேராசான் மீரா நினைவேந்தல் ‘வளரி’ சிறப்பிதழைக் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் வெளியிட, மருத்துவர் கோ.தென்றல் பெற்றுக்கொண்டார். ‘மகடூஉ 100’ பெண் கவிஞர்களின் கவிதை நூலை கவிஞர் மு.முருகேஷ் வெளியிட, கவிஞர் இரா.இராபியத் பெற்றுக்கொண்டார். ‘வளரியோடு இவர்கள்’ நூலை முனைவர் மா.சங்கீதா வெளியிட, வழக்கறிஞர் செ.சென்னம்மாள் பெற்றுக்கொண்டார். கவிஞர் சுதா மாணிக்கம் எழுதிய ‘ஒளித்து வைத்த சொற்கள்’ நூலைத் தஞ்சை மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களின் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.கே.பாஸ்கர் வெளியிட, கவிஞர் மு.அய்யூப்கான் பெற்றுக்கொண்டார். விழாவில், கவிஞர் அய்யப்ப மாதவனுக்கு ‘கவிப்பேராசான் விருது’ மற்றும் ரூ.10 ஆயிரம் தொகையினையும் வழங்கி, கவிஞர் அறிவுமதி சிறப்புரையாற்றினார். கோவை, மதுரை, திருச்சி, கரூர், கள்ளக்குறிச்சி, சென்னை ஆகிய ஊர்களிலிருந்தும் வந்திருந்த கவிஞர்கள் பலரும் கவிதை அமர்வில் பங்கேற்று கவிதை வாசித்தனர். நிகழ்வை கவிஞர் அ.முத்துவிசயன் தொகுத்து வழங்கினார். கவிஞர் அ.இரம்யா நன்றி கூறினார்.

விழாவில் கவிஞர்கள் செ.ஆடலரசன், கோ.பாரதிமோகன், வலங்கைமான் நூர்தீன், செருகுடி செந்தில், அய்யாறு ச.புகழேந்தி, நெளஷாத் கான், ஓவியர் சின்ராசு, குடந்தை அனிதா உள்ளிட்ட ஏராளமான கவிஞர்கள் கலந்துகொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!