தமிழகம்

STEM ஸ்டெம் தொடக்க விழா – வானவில் மன்றம் தொடக்க விழா

160views
மதுரை மாவட்டம் எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளியில் ஸ்டெம் வானவில் மன்றம் தொடக்க விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. அறிவியல் ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். கணித ஆசிரியை அனுசியா வரவேற்றார். ஸ்டெம் அம்பாசிடர் எய்டு இந்தியா விக்னேஷ் பெர்னோலிஸ் பலூன், மாய எழுத்து, நீர் மேலேற்றம், காரணிப்படுத்துதல் ஆகிய பரிசோதனைகளை செய்து காண்பித்து விரிவாக எடுத்துரைத்தார். குறைந்த காற்றழுத்தம் உருவாகும் முறை, ஒளி ஊடுருவல், காரணிப்படுத்துதல் ஆகிய விதிமுறைகளை கூறினார். ஸ்ரீஹரி முருகன், கிரி, நஜ்மா பேகம் ஆகியோர் கேட்ட ஐயங்களுக்கு பரிசோதனைகளின் அடிப்படையில் விளக்கம் அளித்தார். ஆசிரியை சாந்தி தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ராஜவடிவேல் நன்றி கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!