தமிழகம்

மதுரை வாடிப்பட்டி அதிமுக அலுவலகத்தில் வெடிகுண்டு வீச்சு. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் குற்றசாட்டு.

180views
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அதிமுக அலுவலகத்தில் நேற்றிரவு, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி சென்றதாக அதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். காவல் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்து விசாரணை செய்கின்றனர்.
இந்நிலையில் முன்னாள் வருவாய் துறைஅமைச்சரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்பி உதயகுமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு கட்சி நிரவாகிகளுடன் ஆலோசணை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார்:- மதுரை வாடிப்பட்டியில் அதிமுக அலுவலகத்தில் வெடிகுண்டு வீசிய சம்பவம், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டதை காட்டுகிறது. மதுரை மாநகராட்சி பகுதியில் முறையாக மழைநீர் வடிகால் அமைக்காமல் இருப்பது குறித்து வணிகவரிதுறை அமைச்சர் மூர்த்தி மதுரை மேயர் இந்துராணியிடமே குற்றம்சாட்டியுள்ள சம்வம் நகைப்புக்குறியது. இது மாவட்ட அமைச்சரின் இயலாமையை வெளிபடுத்துகிறது
.
முல்லைபெரியார் அணை குறித்து உண்மைக்கு புறம்பாக சில விஷமிகள் சமூகவலைதளங்களில் குறும்படம் வெளியிட்டுள்ளனர். இதனை தடை செய்து உரியவர்களை கைது செய்ய முதல்வர் ஸடாலின் நடவடிக்கை எடுக்கவேண்டும். பெரியா ர்.அணையில் நீரின் கொள்ளளவை 152 அடிக்கு உயர்த்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்
.
அதிமுக இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளது என்றும் கூறினார். ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன் கொரியர் கணேசன் காளிதாஸ் எம்.வி.பி ராஜா யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஸ் கண்ணா நிர்வாகிகள் வெற்றிவேல் ராஜேஷ் கண்ணா மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் லட்சுமி அரியூர் ராதாகிருஷ்ணன் சந்தனத்துரை உள் பட அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!