தமிழகம்

உசிலம்பட்டி அருகே அலங்காரங்களுடன் கூடிய சுமார் 400 ஆண்டுகள் பழமையான இரு நடுகற்கள் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உசிலம்பட்டி அருகே அலங்காரங்களுடன் கூடிய சுமார் 400 ஆண்டுகள் பழமையான இரு நடுகற்கள் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

75views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் – சொக்கத்தேவன்பட்டி கண்மாயில் சிலையுடன் கற்கள் காணப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று கள ஆய்வு நடத்தினர்,
இந்த ஆய்வில் இரு இனக்குழு தலைவன்கள் மற்றும் பெண்கள் அலங்காரங்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்த சுமார் 400 ஆண்டுகள் பழமையான இரண்டு நடுகற்கள் அருகே அருகில் உள்ளதை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் குழுவினர் கண்டறிந்தனர்.
இதில் முதல் நடுகல் 3 அடி அகலமும் 4 அடி உயரத்துடன் காணப்படுகிறது, இனக்குழுவின் தலைவன் குதிரையில் மீது உட்கார்ந்து கொண்டு இருப்பது போன்றும், ஒரு கையில் வாலும் மறுகையில் குதிரையின் கயிற்றை பிடித்து போன்றும் உள்ளது, இதன் அருகிலேயே ஒரு பெண் ஒரு கையில் மலரை பிடித்தவாறும் மறுகையில் பண முடிப்பை பிடித்தவாறும் அலங்காரத்துடன் காணப்படுகிறது.

இந்த நடுகலிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் இரண்டாவது நடுகல் காணப்படுகிறது., இந்த நடுகல் 3 1/2 அடி அகலமும் 4 1/2 அடி உயரத்துடன் காணப்படுகிறது, இதில் குதிரையில் மீது இனக்குழுவின் தலைவன் உட்கார்ந்து இருப்பது போன்றும், ஒரு கையில் வாலும் மறுகையில் குதிரையின் கயிற்றை பிடித்து போன்று காணப்படுகிறது., அருகில் இரண்டு பெண்கள் ஒரு கையில் தண்ணீர் குடம், மறுகையில் பண முடிப்பை பிடித்தவாறும் அலங்காரத்துடன் காணப்படுகிறது., மேலும் இனக்குழு தலைவனுக்கும் பைண்களுக்கும் நடுவில் வெண் குடை ஒன்றும் உள்ளது.
இரண்டு இனக்குழு தலைவன்களுக்கு இடையே நடைபெற்ற போரில் உயிர்நீத்த தலைவன்களின் நினைவாக எழுப்பப்பட்ட நடுகற்கலாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தெரிவித்தார்.

மேலும் உசிலம்பட்டி பகுதியில் தொடர்ச்சியாக பல்வேறு நடுகல்கள், தமிழி எழுத்துகள் போன்ற தொல்லியல் எச்சங்கள் கிடைத்து வரும் நிலையில் விரிவான அகழாய்வு நடத்தினால் மேலும் பல தொன்மையான வரலாறுகள் வெளிப்படும் என தெரிவித்தார்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!