தமிழகம்

உசிலம்பட்டி கிளை சிறை கைதிகளுக்கு தாங்கள் சேமித்து வைத்த பணத்தின் மூலம் புத்தகங்கள் வாங்கி அன்பளிப்பாக அளித்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு

214views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் கிளை சிறைச்சாலை அமைந்துள்ளது இங்கிருக்கும் கைதிகளின் மனப்பான்மையை மாற்றும் விதத்தில் இங்கு இருக்கும் சில கைதிகளுக்கு கைதிகளை பார்க்க வரும் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் அவர்கள் வாசிப்பு திறனை அதிகரிக்கவும் அவர்களின் மனநிலையை மாற்றவும் புத்தகங்கள் வழங்கலாம் என கிளை சிறைச்சாலை நிர்வாகத்தினர் பேனர் அறிவிப்பு வைத்துள்ளனர், இதனை பார்த்த பானா மூப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் தாங்கள் வீட்டில் கொடுக்கப்படும் பணத்தை மூன்று மாதங்களாக சேமித்து வைத்து சிறையில் இருக்கும் கைதிகளுக்கு புத்தகங்கள்களை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் மாணவ மாணவிகள் வழங்கினர்.  உடன் பாலமுருகன், ராமமூர்த்தி மற்றும் பானாமூப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீனா, இடைநிலை ஆசிரியர் இளங்கோவன், ஆசிரியர் சரஸ்வதி, பட்டதாரி ஆசிரியர் சற்குணராஜா, மற்றும் மாணவ மாணவிகள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!