தமிழகம்

உசிலம்பட்டி அருகே கிராமத்திற்குள் வழிதவறி வந்த புள்ளி மானை மீட்டு பொதுமக்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

181views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் அமைந்துள்ள கன்னியம்பட்டி கிராமத்தில் சுமார் 70 கிலோ மதிக்கத்தக்க புள்ளிமான் இரண்டு கொம்புகளும் உடைந்த நிலையில் காயங்களுடன் கிராமத்திற்குள் வந்தது.இதனைப் பார்த்த ஊர் பொதுமக்கள் மானைப் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அலுவலர் சூரியபிரபா மானை சோதனை செய்ததில் மானை நாய்கள் கடித்தற்கான அடையாளங்கள் காணப்பட்டன.உடனடியாக முதலுதவிச்சிகிச்சை அளித்து மானை வனப்பகுதிக்குள் பத்திரமாக விட்டனர். மேலும் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் அமைந்துள்ள கிராமப்பகுதிகளல் மான்கள் இரை தேடி கிராமப்பகுதிக்குள் அடிக்கடி வருவதும் அவை நாய் மற்றும் மர்ம நபர்களாhல் காயமடைவதும் அடிக்கடி அரங்கேறி வருகின்றது.எனவேடி வனவிலங்குகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க வனத்துறையினர் அடிக்கடி ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டுமென கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!