தமிழகம்

உசிலம்பட்டி சந்தை திடலில் பூக்கடைகளை அடைக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உத்தரவிட்டதால் சுமார் ஆயிரம்கிலோ பூக்கள் தேங்கி வீணாகியது.

68views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்துக்கு சொந்தமான சந்தைத்திடல் உள்ளது.இந்த சந்தைத்திடலில் பூச்சந்தை-உழவர்சந்தை-காய்கறி சந்தை-வாரச்சந்தை ஆகியன இயங்கி வருகின்றன.இந்நிலையில் பூச்சந்தையில் உள்ள கடைகள் நீண்டகாலமாக டெண்டர் விடாமல் பழைய வாடகையில் இயங்கி வருவதாகவும் இக்கடைகளுக்கு புதிய டெண்டர் அறிவிப்பை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் வெளியிட்டு புதிய நபர்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டது.ஆனால் 15 வருடங்களுக்கு மேல் வாடகைக்கு இருக்கும் தங்களை காலி செய்யச் சொன்னால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பூ வியாபாரிகள் எதிhப்பு தெரிவித்து கடைகளை காலி செய்ய மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சுமார் 66 கடைகளை அளவீடு செய்து புதிதாக டெண்டர் எடுத்த நபர்களுக்கு இன்று விடப்பட இருப்பதாகவும் இதனால் பூக்கடைகளை அடைக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.இதனை அறியாத பூவியாபாரிகள் காலையில் வழக்கம் போல் விவசாயிகளிடமிருந்து பூக்களை கொள்முதல் செய்தனர்.ஆனால் ஊராட்சி ஒன்றிய நிhவாகத்தின் அறிவிப்பால் பூக்களை மொத்தமாக கொள்முதல் செய்யும் பூ வியாபாரிகள் யாரும் உசிலம்பட்டி பூ சந்தைக்கு வரவில்லை. இதனால் பூக்களை வாங்க ஆளில்லாததால் சுமார் ஆயிரம் கிலோவிற்கு மேல் பூக்கள் தேங்கி வீணானதாக பூ வியாரிகள் கவலை தெரிவித்தனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!