தமிழகம்

உசிலம்பட்டி டிபி ரோட்டில் உள்ள ஆர்சி சிறுவர் பள்ளியில் மட்கும் குப்பை மக்கா குப்பை பற்றி நகராட்சி சார்பில்தேர்வு நடத்தப்பட்டது

151views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டிபி ரோட்டில் உள்ள ஆர்சி சிறுவர் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மட்கும் குப்பை மக்காத குப்பை பற்றி எவ்வாறு தெரிந்து வைத்துள்ளார்கள் என்பதை மாணவ மாணவிகளின் அறிவுத்திறனை வெளிப்படுத்தும் வகையில் மாணவ மாணவிகளுக்கு நகராட்சி சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் பல்வேறு மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்கள் எழுதிய தேர்வினை திருத்தம் செய்து அத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  இந்த ஏற்பாட்டை நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவகுமார் ஏற்பாடு செய்துள்ளார்.  இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகரமன்ற தலைவர் சகுந்தலா, துணை தலைவர் தேன்மொழி, நகராட்சி ஆணையாளர் பாண்டிதாய், திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் விஜய், ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். இதில் நகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!