தமிழகம்

5வது முறையாக நிரம்பிய உசிலம்பட்டி கண்மாய். மக்கள் தெய்வ வழிபாடு நடத்தி பூப்போட்டு வரவேற்றனர்.

145views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ளது உசிலம்பட்டி கண்மாய். சுமார் 33ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கண்மாய் உசிலம்பட்டி நகரப்பகுதி மக்களின் குடிநீருக்கு ஆதரமாக உள்ளது. இக்கண்மாய் தூர்வாரப்படாமல் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி பாரமரிப்பின்றி கிடந்ததை கடந்த 2வருடத்திற்கு முன்பு 58 கிராம இளைஞர் சங்கத்தினர் என்ற தன்னார்வ அமைப்பினர் தனியார் பங்களிப்பு நிதி உதவியுடன் கண்மாயை சீரமைத்தனர்.
இக்கண்மாய் தொடர் மழையினாலும் 58 கிராம கால்வாய் நீரினாலும் கடந்த 2 வருடத்தில் தற்போது 5வது முறையாக நிரம்பியுள்ளது.இந்நிலையில் வருணபகவானுக்கு நன்றி தெரிவித்து உசிலம்பட்டி மக்கள் கண்மாய்கரையிலுள்ள காவல் தெய்வம் கருப்பசாமிக்கு தேங்காய் வாழைப்பழம் வைத்து வழிபாடு நடத்தினர்.பின்னர் இயற்கைக்கு நன்றி தெரிவித்து கண்மாயில் பூ போட்டு நீரினை வரவேற்றனர்.
பின்னர் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி நகர்மன்றத்தலைவர் சகுந்தலா சௌந்திரபாண்டியன் தலைமையிலான 58 கிராம இளைஞர் சங்கத்தினர் பொதுமக்கள் கலந்து கொண்டனா.;கடந்த 2 வருடத்திற்கு போர்வெல் குழியில் பூமியில் 1000அடி ஆழ மட்டத்திலிருந்த தண்ணீர் தற்போது உசிலம்பட்டி கண்மாய் நிரம்பியவுடன் தற்போது 50 அடி ஆழ மட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!