தமிழகம்

உசிலம்பட்டியில் முடிதிருத்துவோர் சங்கத்தினர் அரசு சார்பில் தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப்பட்டா இடத்தில் குடில்கள் அமைத்து குடியேற்றக் கோரி 5 நாட்கள் சலூன் கடையை அடைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

87views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சிக்கம்பட்டியில் 120க்கும் மேற்ப்பட்ட முடிதிருத்துவோர் நலச்சங்கத்தினருக்கு அரசு சார்பில் இடம் ஒதுக்கப்பட்டு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.ஆனால் இந்த இடம் ஒதுக்கப்பட்டதற்கு அதன் அருகில் குடியிருப்பவர்களும்; இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாலும் இடம் அளவீடு செய்து கல் ஊண்டி இடம் ஒதுக்குவதில் பிரச்சனை இருந்து வருகின்றது.கடந்த ஒரு வருடத்தில் பலமுறை அதிகாரிகள் காவல்துறையின் உதவியுடன் இடம் அளவீடு செய்யச் சென்றாலும் ஆக்கிரமிப்பாளர்களின் எதிர்ப்பு காரணமாக இடம் அளவீடு செய்யாமல் திரும்பியுள்ளனர்.இந்நிலையில் அரசு சார்பில் தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து இலவச வீட்டுமனைப்பட்டா இடத்தில் குடில்கள் அமைத்து குடியேற்றக் கோரியும் இலவச பட்டா வழங்கிய அரசுக்கு நன்றி தெரிவித்தும் முடிததிருத்துவோர் நலச்சங்கத்தினர் 5 நாட்கள் சலூன் கடையை அடைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் உசிலம்பட்டிப் பகுதியில் உள்ள அனைத்து சலூன் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.மேலும் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உதவியுடன் சம்மந்தப்பட்ட இடத்தில் இடம் அளவீடு செய்யச் சென்றனர்.அங்கு ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டது.காவல்துறை எச்சரிக்கையையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் கலைந்து சென்றனர்.இதனையடுத்து போலிசார் பாதுகாப்புடன் முடிதிருத்துவோர் நலச்சங்கத்தினர் குடில்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!