தமிழகம்

கார் பார்க்கிங்காக மாறிய உசிலம்பட்டி அரசு மருத்துவமணை.இடவசதி இல்லாததால் 108 ஆம்புலன்ஸ் செல்வதில் சிரமம். நேயாளிகள் அவதி.

73views
மதுரை மாவட்டம் பேரையூர் ரோட்டில் உள்ளது அரசு மாவட்ட தலைமை மருத்துவமணை.உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கர்ப்பிணி பெண்கள் நோயாளிகள் விபத்து நோயாளிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் அரசு மருத்துவமணைக்கு வந்து செல்கின்றனர். ஆனால் இந்த அரசு தலைமை மருத்துவமனையில் போதுமான இடவசதி இல்லாமல் 108 ஆம்புலன்ஸில் வரும் நோயாளிகள் மருத்துவமனைக்குள் வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.அவசர ஆம்புலண்ஸே மருத்துவமணைக்குள் வர 10 நிமிடத்திற்கும் மேலாகின்றது. மேலும் இங்கு மருத்துவமணைக்கு வரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள் காண வரும் நோயாளிகளின் உறவினர்கள் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தை மருத்துவமனை வளாகத்திலேயே நிறுத்தி வைப்பதால் மருத்துவமணையில் இடம் நெரிசல் ஏற்பட்டு பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.மருத்;துவர்களின் 15க்கும் மேற்ப்பட்ட கார்களின் மருத்துவமணை வளாகத்தினுள் வரிசையாக நிறுத்தப்படுவாதல் இது மருத்துவமணையா அல்லது கார் பார்க்கிங் வளாகமா என்ற சந்தேகம் நோயாளிகளுக்கு ஏற்படுகின்றது.
மேலும் நோயாளிகளும் அவர்களைக் காண வரும் உறவினர்களும் இடமில்லாமல் வெயிலில் நிற்க வேண்டியுள்ளது. உடனடியாக தமிழக அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு மதுலையின்; இரண்டாவது அரசு தலைமை மருத்துவமனையாக திகழ்ந்துவரும் உசிலம்பட்டி மருத்துவமணைக்கு போதிய இடவசதி ஏற்படுத்திக் கொடுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றி உரிய நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை பெறும் வகையில் வழி வகுத்துக் கொடுக்க வேண்டும் என்பதே பலருடைய கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!