தமிழகம்

காரணம் தப்பினால் மரணம் கவனிக்காமல் வந்தால் காயம் நட்ட நடு சாலையில் மெகா சைஸ் பள்ளம் மாட்டிக் கொண்ட மினி வேன்

138views
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாலை கொண்டும் குழியுமாகவே உள்ளது மேலும் பிரதான சாலையான பல சாலைகள் மெகா சைஸ் பள்ளங்களாகவே காணப்படுகிறது இதே போன்று தான் மதுரை எல்லீஸ் நகர் 70 அடி சாலை பைபாஸ் சாலை பிரிவு பகுதியில் சுமார் 2 அடி ஆழத்திற்கு மெகா சைஸில் பள்ளம் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் அடிக்கடி வாகனங்கள் மாற்றுவதும் பின் தள்ளி விடுவதுமாக தொடர்வதாக ஆகி கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் இன்று மாலை மினி சரக்கு வாகனம் ஒன்று சாலையில் உள்ள பள்ளத்தில் மாட்டிக் கொண்டது சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போராடியும் வாகனத்தை மீட்க முடியவில்லை. பின்னர் சுமார் 30க்கும் மேற்பட்டவர் பொதுமக்கள் இணைந்து ஜாக்கி உதவியுடன் வாகனத்தை மீட்டனர் சிறிய வாகனமே மீட்பதற்கு தெனறிய நிலையில் மிகப்பெரிய கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் மாற்றினால் என்ன ஆவது.  மேலும் இப்பள்ளத்தில் இரு சக்கர வாகன ஓட்டுதல் இரவு நேரத்தில் வரும்பொழுது காரணம் தப்பினால் மரணம் கவனம் தப்பினர் காயம் கீழே விழுந்து காயத்துடன் செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளும் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளோ சாலையை உடனடியாக சீர் செய்து மக்களின் உயிர்காக்க வேண்டும் என்பதை அனைவரும் கோரிக்கையாக உள்ளது உயிர்பலி ஆகும் முன் உரிய நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்.
செய்தியாளர் : வி காளமேகம்,  மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!