தமிழகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் வருமானம்- ரூபாய் 87.68 லட்சம் ரொக்க பணம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

127views
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் உப கோவில்களுக்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் எண்ணும் பணியானது இன்று கோவில் துணை ஆணையர் அருணாச்சலம் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் என 300 பேர் பங்கேற்ற நிலையில் நடைபெற்றது.

இதில் உண்டியல் வருமானமாக ரூபாய் எண்பத்தி ஏழு லட்சத்து அறுபத்தெட்டாயிரத்து மூந்நூற்றி பத்து ரூபாய் (ரூ. 87,68,310) ரொக்க பணம் மற்றும் 540 கிராம் தங்கம், 725 கிராம் வெள்ளியும் மற்றும் 292 அயல்நாட்டு நோட்டுக்கள் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது என திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!