இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , காரைக்குடி செல்லப்பா வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில், தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடனுதவிகளை வழங்கினார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், லைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார் வேலைவாயப்பு முகாமினை தொடங்கி வைத்து, தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கி, 113 மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சார்ந்த மொத்தம் 1,641 உறுப்பினர்களுக்கு ரூ.8.61 கோடி மதிப்பீட்டிலான வங்கிக்கடனுதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், ஆகியோர் சிறப்புரை வழங்கியும், சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையேற்றும், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை. டாக்டர்.அதுல்யா மிஸ்ரா, , நில நிருவாக ஆணையர் எஸ்.நாகராஜன், செயல் உறுப்பினர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டாக்டர்.கே.பி.கார்த்திகேயன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் பா.பிரியங்கா பங்கஜம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.மாங்குடி (காரைக்குடி), ஆ.தமிழரசிரவிக்குமார் (மானாமதுரை) ஆகியோர் முன்னிலை வகித்தும் சிறப்பித்தனர் மற்றும் காரைக்குடி நகர்மன்றத்தலைவர் சோ.முத்துத்துரை, துணைத்தலைவர் நா.குணசேகரன், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) க.வானதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பேசுகையில், டாக்டர்.கலைஞர், மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோர்களின் வழியில், தமிழகத்தில் சிறப்பான ஆட்சியினை நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள்.




