உலகம்

அமீரக தமிழ் சங்க தலைவிக்கு கவுரவ டாக்டர் பட்டம் துபாயில் வழங்கப்பட்டது.

308views
ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் செயல்பட்டு வருகிறது தமிழக அமீரக தமிழ் சங்கம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழ்நாடு பெண்கள் அமைப்பு.

ஒவ்வொரு ஆண்டும் ரத்த தான முகாம், கலை நிகழ்ச்சி, மாணவர்களை ஊக்குவிக்கும் ‘திறன் போட்டிகள்’ ஆகியவைகள் இந்த அமைப்பினால் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக திருக்குறள் போட்டியும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பின் தலைவியாக இருப்பவர் திருமதி ஷீலா. இவரின் பல்வேறு சமூக சேவைகளை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் துபாயில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் *100 நபர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் அளித்து பிரமிக்க  வைத்தனர் .  சிறப்பு விருந்தினராக  குக்கு வித்து கோமாளி புகழ் குரேஷி கலந்து கொண்டார்.  இந்த நிகழ்ச்சியில் Dr.பசிலா ஆசாத், Dr.மீனா, இமான் ஹமீத் யாசின், நஜீம் மரைக்கா, ராசல்கைமா பூபதி & கலை,  டோக்கியோ தமிழ் மன்றம் மகாதேவன் மற்றும் அமீரகப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் : வி களத்தூர்ஷா, துபாய்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!