உலகம்

கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இரத்த பிளேட்லெட் தான முகாம்

14views
ஷார்ஜா :
கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இரத்த பிளேட்லெட் தான முகாம் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமை தாங்கினார்.
இந்த முகாமில் பல கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தங்களது மதிப்புமிக்க பிளேட்லெட் தானம் செய்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினார்களாக அன்வர் குரூப் நிறுவனர் திரு.அன்வர் தீன், சாம்கோ நிறுவன அதிபர் திரு. சமீர்,சமூக செயற்பாட்டாளர் திரு. முஹம்மது ராசிக், இசை அமைப்பாளர் திரு. ஷாஹீத, காஸ்மோரா மார்க்கெட்டிங் நிறுவன அதிபர் ஆர்த்தி அஸ்வின், அமீரக திரைப்பட நடிகர் அப்துல்லா ஜாபலி, திரு.சபீன் மோட்டிவேஷனல் பேச்சாளர் , திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் நவாசுதீன், ராசிக் ஆமீன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.நிகழ்ச்சியை கிரீன் குளோப் உறுப்பினர்கள் ரசூல், தாஹிர்,சாபீர், பீர் முஹம்மது, அப்துல் ரஹ்மான் மற்றும் தன்னார்வலர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர். பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு தண்ணீர் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது.இறுதியில் நிகழ்ச்சி சிறக்க ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!