உலகம்

தமிழ் நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு A.M.ஷாஜஹான் அவர்களுக்கு அய்மான் சங்கம் வாழ்த்து

145views
இந்திய முஸ்லிம் சமூகத்தின் தாய் சபையாக கருதப்படும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வாணியம்பாடி திரு. சையது பாரூக் பாஷா அவர்களுக்கும், பாபநாசம் திரு. A.M. ஷாஜகான் அவர்களுக்கும் முதற்கண் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்ந்து TVK தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான ஆட்சியில் இணைந்து புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு. A.M. ஷாஜஹான் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சமுதாயத்திற்கும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும் தங்களின் அர்ப்பணிப்பு மிக முக்கியமானதாகும் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. தங்களின் பணி சிறக்கவும், தங்களின் பணியின் மூலம் சமுதாயமும் , தமிழ்நாடும் மேலும் சிறக்கவும் வாழ்த்தி பிரார்த்திக்கிறோம்
அமீரக தாய் சபையான அய்மான் சங்கம் சார்பாக இதயபூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அய்மான் சங்கம்,  அபுதாபி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!