உலகம்

துபாயில் முத்தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா : வி ஜி சந்தோஷத்துக்கு ‘உலக திருக்குறள் தூதுவர் விருது’ தமிழ் பணியை பாராட்டி வழங்கப்பட்டது.

106views
துபாய் : செப்டம்பர் 30,
முத்தமிழ் சங்கம் சார்பில் விஜிபி குழும தலைவரும் உலக தமிழ் சங்கத்தின் தலைவருமான வி ஜி சந்தோஷத்துக்கு அவரது தமிழ் பணியை கவுரவிக்கும் வகையில் பாராட்டு விழா துபாய் ஊதி மேத்தா பகுதியில் உள்ள பாகிஸ்தான் அரங்கில் நடந்தது.

முன்னதாக விழாவில் வி ஜி சந்தோஷத்தின் 88 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இஸ்லாமிய விவகார துறையின் நன்கொடை நிதிய இயக்குனர் ஈஷா அப்துல்லா அல் குரைர் கலந்து கொண்டு வி ஜி சந்தோஷத்துக்கு அவரது தமிழ் பணியை பாராட்டும் வகையில் ‘உலக திருக்குறள் தூதுவர்’ என்ற விருதுநை வழங்கி கௌரவித்தார்.

அப்போது முத்தமிழ் சங்க சேர்மன் ராமச்சந்திரன், தலைவர் ஷா, பொதுச் செயலாளர் சுரேஷ்குமார், கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் ஆ முகமது முகைதீன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். விருதினை பெற்றுக்கொண்டு வி ஜி சந்தோஷம் பேசும்போது, ‘உலகம் முழுவதிலும் எனது தமிழ் பணியுடன் திருவள்ளுவர் சிலைகளையும் நிறுவியும் வருகிறேன். அதனை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதினை பெற்றதற்கு மகிழ்ச்சி அடைகிறேன் எனக் குறிப்பிட்டார்.
இந்த பாராட்டு விழாவில் தமிழக அரசின் அயலக தமிழர் நல வாரிய வளைகுடா உறுப்பினர் எஸ் எஸ் மீரான், பஹைரன் தமிழ் சங்க தலைவர் ரவி, மணி அரசு, ராமசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவின் ஒரு பகுதியாக கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் சார்பில் வி ஜி சந்தோஷத்துக்கு ‘உலகத்தமிழர்களின் அடையாளம்’ என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும், அந்த அறக்கட்டளையின் சார்பில் துபாயில் ஐந்து ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தன்னார்வத்துடன் இலவசமாக தமிழ் கற்றுத் தரும் 13 முன்னாள் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!