உலகம்

துபாய் கிரீன் குளோப் சார்பில் சாதனை படைத்த ரத்ததான முகாம்

115views
துபாய் :
தொடர்ந்து பல வருடங்களாக இரத்த தான முகாம்களை நடத்திவரும் கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் இரத்த தான முகாம் மிக சிறப்பாக துபாய் காவல் துணையுடன் இணைந்து இன்று (23.04.2026) மாலை 4மணி முதல் இரவு 10 மணி வரை சிறப்பாக நடந்தேறியது. இந்நிகழ்வின் சிறப்பானது முகாமில் சுமார் 200 நபர்கள் கலந்துகொண்டு 146 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள்.

அமீரக சுகாதார சேவைகள் (ஈ. ஹெச். எஸ்) அமைப்பின் தரவுகளின் அடிப்படையில் சமீபத்திய அமீரகத்தின் இரத்த தான முகாம்களின் சாதனைகளை இன்றைய கிரீன் குளோப் அமைப்பின் இரத்த தான முகாம் முறியடித்துள்ளது.நிகழ்விற்கு கிரீன் குளோப் அமைப்பின் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமை தாங்கினார். கிரீன் குளோப் அமைப்பின் உறுப்பினர்கள் ரசூல்,அப்துல் ரஹ்மான்,தாஹிர், பீர் முஹம்மது, சாபீர் மற்றும் பல தன்னார்வளர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நெறிப்படுத்தினர்.நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தனியார் நிறுவன நிதி மேலாளர் மணவாளன் ஆறுமுகம், ஜாகுவர் பிரிண்டிங் உரிமையாளர் ஷா, முதன்மை பத்திரிக்கையாளர் முதுவை ஹிதாயத்துல்லா , பீஸ்& கேர் ரபீக், குவைத் மருத்துவ மனை ஆசிக் , மாஜிதா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.இந்நிகழ்வில் பங்கேற்ற கொடையாளர்கள் உட்பட அனைவருக்கும் பழங்கள், பழச்சாறு, தேநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு பெரும் உறுதுணையாக இருந்த துபாய் காவல்துறை, குறிப்பாக நைப் காவல் நிலைய அதிகாரிகளுக்கு மேலும் இந்நிகழ்ச்சி சிறக்க உதவிய அனைவருக்கும்,கிரீன் குளோப் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!