உலகம்

அஜ்மானில் யோகா பயிற்சி மேற்கொண்ட மாணவிகளுக்கு சர்வதேச சாதனை சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது

175views
அஜ்மானில் மங்கையர் அமீரகம் அமைப்பின் சார்பில் சர்வதேச குழந்தைகள் தினத்தை யொட்டி பத்மாசனம் என்ற யோகா சர்வதேச சாதனை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 42 மாணவிகள் ஒவ்வொருவரும் 30 நிமிடம் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சி செய்த மாணவிகளுக்கு இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற சர்வதேச சாதனை சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பிரபாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். நிகழ்ச்சியில் மங்கையர் அமீரகம் அமைப்பின் ப்ரீத்தி ராஜேஷ் மற்றும் அகமது ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மங்கையர் அமீரகம் அமைப்பினர் சிறப்புடன் செய்து இருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!