தமிழகம்

திருச்சியில் இந்திய மருத்துவ முறை எலும்பு மூட்டு வலி சிகிச்சை மருத்துவமனையை மத்திய அரசின் ஆயுஷ் இயக்குனர் டாக்டர் சேவக் விஜய் திறந்து வைத்தார்.

16views
திருச்சி புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள டாக்டர் சாலை ஜேகே சித்தர் வனத்தில் சர்வதேச வர்மவமுறை எலும்பு மூட்டு வலி சிகிச்சை மருத்துவமனையை மத்திய அரசின் ஆயுஷ் இயக்குனர் டாக்டர் சேவக் விஜய் திறந்து வைத்தார்.
தமிழர்களின் தொன்மையான மருத்துவ அறிவு பாரம்பரியத்தில் தனித்துவமான இடத்தை பெற்றுள்ள சித்த மருத்துவம், வர்மம் மருத்துவம் மற்றும் சித்த முத்திரைகள் மருத்துவத்துறையில் சிறந்த பெற்றுள்ளன.
இந்த சிகிச்சை முறைகளுக்காக, டாக்டர் சாலை ஜெய கல்பனா சித்தர் வனம் சர்வதேச வர்ம முறை எலும்பு மூட்டு வலி சிகிச்சை மருத்துவமனை 27 அக்டோபர் 2026 அன்று திறக்கப்பட்டது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மருத்துவமனையை இந்திய அரசின் ஆயுஷ் மற்றும் T.S.I. அமைப்பின் தலைவர் டாக்டர் சேவக் விஜய் திறந்து வைத்தார்.
சித்தர் வனம் சர்வதேச சித்த மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் நிறுவனர் டாக்டர் சாலை ஜெய கல்பனா முன்னிலை வகித்தார்.
மருத்துவமனையை திறந்து வைத்து பேசிய டாக்டர் சேவக் விஜய் அவர்கள் ‘இது போன்ற ஒரு தனித்துவமான மற்றும் முழுமையான வர்ம மருத்துவப் பல்நோக்கு மருத்துவமனையை நான் காண்பது இதுவே முதல் முறை’ என்று பாராட்டினார்.
தொடர்ந்து பல்நோக்கு வர்ம மருத்துவமனை வளாகத்தை சுற்றிப் பார்த்த அவர் சித்தமருத்துவத்தின் பாரம்பரிய நோய் கணிப்பு முறையான தேரையர், நீர்க்குறி மற்றும் நெய்க்குறி ஆய்வகத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.
மேலும் அவர் கூறும் போது ‘தமிழ் மருத்துவம் சிறந்த முறையில் செயல்படுவதாக’வும் குறிப்பிட்டார்.  மேலும் ‘ மை பாரத் அமைப்பின் 40 மாவட்ட பொறுப்பாளர்களுக்கு டாக்டர் ஜெய கல்பனா அவர்கள் தலைமையில் பாரதிதாசன் பல்கலை பல்கலைக்கழகத்தில் சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும்’ என்று உறுதி அளித்தார்.
மத்திய அரசின் நோக்கமான திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதான செயல்பாடுகளை இந்த சித்தர் வனம் பல பயிற்சிகள் அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிவருவது பாராட்டத்தக்கது என்றார்.
விழாவில் ஜேகே சித்தர் வன மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மருதமலை முருகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
இந்த மருத்துவமனை சார்பாக, டிசம்பர் 27ம் தேதி உலகின் பல பகுதிகளிலும் இருந்து ‘உலகளாவிய முத்திரை சந்திப்பு’ திருச்சி சமயபுரம் தில் நடைபெற உள்ளது என அதன் இயக்குனர் டாக்டர் மருதமலை முருகன் தெரிவித்தார்.
வி.களத்தூர் கமால் பாஷா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!