தமிழகம்

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச் சாவடி , நெடுஞ்சாலை துறை விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் வருகிற 8 – ந் தேதி சுங்கச்சாவடி முன்பு உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு .

144views
திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச் சாவடி , நெடுஞ்சாலை துறை விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாகவும் , அதனை அகற்ற வேண்டும் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு வேண்டி , திருமங்கலம் உள்ளூர் வாகன ஓட்டிகள் , தொழிலதிபர்கள், பொதுமக்கள் வருகிற 8 – ந் தேதி சுங்கச்சாவடி முன்பு உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு .
(அன்றைய தினமே அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும், உண்ணாவிரதப் போராட்ட நாளிலேயே திருமங்கலம் நகர் முழுவதும் வீடு மற்றும் கடைகள் முன்பு கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் , இன்று இரவு நடைபெற்ற அனைத்து கட்சியினர் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் என்ற இடத்தில் அமைந்துள்ள மத்திய அரசால் இயக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இயங்கிவரும் நிலையில்,  நெடுஞ்சாலை துறையின் விதிமுறைகளுக்கு மீறி , நகராட்சி பகுதியில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டதற்கு , ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலிலேயே திருமங்கலம் நகர் மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில்,  தற்போது விதிமுறை மீறி அமைக்கப்பட்டுள்ள இந்த சுங்கச்சாவடி – யை அகற்றி, அதற்கென உரிய இடமான ராயபாளையம் என்ற இடத்தில் அமைக்கக் கோரியும், உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்க கூறியும் , கடந்த 22 ஆம் தேதி திருமங்கலம் நகர் முழுவதும் கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவைகளை ஒருநாள் கடை அடைப்பு நடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், வருகிற 8-ந் தேதி சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவினர், சுங்கச்சாவடி – யை முற்றுகை போராட்டம் நடத்த அறிவித்தது.
ஆனால் தற்போது வருகிற 8 – ந் தேதி சுங்கச்சாவடி முன்பு உண்ணாவிரதப் போராட்டம் செய்ய முடிவு செய்தும், அன்றைய தினமே வீடுகள் மற்றும் கடைகள் தோறும் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் நடத்த ,  இன்று இரவு நடைபெற்ற அனைத்துக் கட்சியினர் ஆலோசனைக் கூட்டத்தில் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர் .மேலும் வருகிற 8 – ந் தேதியே அடுத்த கட்ட போராட்டத்தை குறித்து முடிவு செய்யப்படும் எனவும் கூறப்பட்டது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!