தமிழகம்

தமிழக இசுலாமியர்களின் வாணியம்பாடி இசுலாமிய கல்வி நிறுவனம் துவங்கி 125 ஆண்டு தொடர் சாதனை, ஆகஸ்ட் 26 முக்கியமான நாள்

48views
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இன்றைய திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மட்டுமின்றி தமிழகஇசுலாமியர்களின் கல்வி வரலாற்றில் ஆகஸ்ட்26 ஒரு பொன்னான நாள், 1903ம் ஆண்டு ஆகஸ்ட் 26 தேதி வெறும் 3 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களுடன் இசுலாமியா பள்ளி வாணியம்பாடி பாங்ஹிராவ் பகுதியில் துவக்கப்பட்டது. சிப்பாய் முகமது ஷரீப் மற்றும் பீமாராவ் ஆகியோர் ஆசிரியர்களாக பணி அமர்த்தப்பட்டனர். மெளலவி முகமது முராத் முதல் பாடத்தை துவக்கிவைத்தார்.3 மாணவர்களுடன் துவக்கப்பட்ட பள்ளி 3 நாட்களில் மாணவர்களின் எண்ணிக்கை 200 ஐ கடந்தது.  அப்போது இந்த கல்வி பயணம்எவ்வளவு நாள் தொடரும் என யாருக்கும் தெரியாது.
ஆனால் இந்த துணிச்சலான முயற்சியால் இன்று 6 கல்வி நிலையங்கள் உள்ளன. சுமார் 10000 பேர் தற்போது பயின்று வருகின்றனர்.  மதராஸ் மாகாணத்தில் வாழ்ந்த இசுலாமியர்களின் கல்வி மற்றும் சமூக சிந்தனையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது.  இதன் தாக்கத்தால் தமிழ்நாட்டில் பல இடங்களில் இதே பெயரில் கல்வி நிறுவனங்கள் உருவாகின.
வாணியம்பாடி கல்வி வரலாற்றில் மட்டும் அல்ல, இசுலாமியர்களின் கல்வி வளர்ச்சியில் இசுலாமிய பள்ளியின் பங்களிப்பு என்றும் நினைவுகூற தக்கது..ஆம் இன்று(ஆகஸ்ட் 20) பள்ளி துவங்கி125 ஆண்டுகள் ஆகிவிட்டன. (படம்) ஆனால் இன்றும் பள்ளி கட்டிடம் புத்தம்புதியதாகவே காட்சி தருகிறது.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!