தமிழகம்

உசிலம்பட்டியில் துணிவு படத்திற்கு அதிக கட்டணம் வசூல் செய்வதாகக் கூறி அஜித் ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

58views
தமிழகம் முழுவதும் அஜித் நடித்த துணிவு திரைப்படம், மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் இரு தியேட்டர்களில் நாளை அஜித் நடித்த துணிவு திரைப்படமும், விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் வெளியாக உள்ளது.,இதில் உசிலம்பட்டி பொன்னுச்சாமி தியேட்டரில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் நாளை காலை வெளியாக உள்ளது இதில் திரையரங்கு முன்பு ரசிகர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் குறிப்பாக அஜித் நடித்த துணிவு திரைப்படத்திற்கு அரசு நிர்ணயத்த கட்டணத்தை விட அதிகப்படியாக ரூ 500 முதல் ரூ.1000 வரை கட்டணம் வசூலிப்பதாக கூறி அஜித் ரசிகர்கள் தியேட்டர் முன்பு தமிழக அரசு அதிக கட்டணம் வசூல் செய்யும் தியேட்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேனி நெடுஞ் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த போலிசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போகச் செய்தனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!