தமிழகம்

ஆம்பூர் அருகே ரூ.50 ஆயிரத்திற்கு 2 மாத பெண் குழந்தை விற்பனை – ரூ.13 லட்சம் கொடுத்து வாங்கிய தம்பதி உட்பட 6 பேர் கைது.

16views
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெற்ற தாயே தனது 2 மாத பெண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரது கைகளுக்கு மாறிய அந்த குழந்தை நாமக்கல் மாவட்டத்தில் மீட்கப்பட்ட நிலையில், குழந்தை விற்பனை தொடர்பாக தம்பதி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு தரைகாடு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஷபீர் மற்றும் அவரது மனைவி ஜபீனா.இவர்கள் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு பகுதியில் சுற்றிதிரிந்து பிச்சை எடுத்து வந்துள்ளார். ஜபீனாவுக்கு 2 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ரஷீத் அஹ்மத், ஜபீனாவை அணுகி குழந்தையை கொடுத்தால் பணம் தருவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து ஜபீனா கணவருக்கு தெரியாமல் கடந்த மாதம் ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு குழந்தையை ரஷித்திடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜபீனா கையில் குழந்தை இல்லாததை அறிந்த கணவர் இது குறித்து மனைவியிடம் கேட்டுள்ளார்.மேலும் குழந்தை கொண்டு வந்து காட்டவில்லை என்றால் என்னோடு வாழ வைக்க மாட்டேன் என்று கூறியதால் பயந்து போன ஜபீனா மீண்டும் ரஷீதை அணுக்கு குழந்தையை திருப்பி கொடுக்க வலியுறுத்தியுள்ளார். குழந்தை திருப்பி கொடுக்காததால் ஜபீனா சம்பவம் குறித்து உமரபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாகரே உத்தரவின் பேரில் தனிப்படை அமைந்து விசாரணை நடத்தினர்.
அப்போது குழந்தை பல இடைத்தரகர்கள் மூலம் கைமாறி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் குழந்தை இல்லாத தம்பதியிடம் ரூ.13 லட்சத்திற்கு விற்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து நாமக்கல் சென்ற போலீசார் சதீஷ்குமார் – ஹரிணி தம்பதியிடம் இருந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர். குழந்தை விற்பனையில் தொடர்புடைய ஜபீனா, ரஷித் அஹ்மத், புகழேந்தி, உமா மகேஸ்வரி, சதீஷ்குமார், ஹரிணி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 மாத குழந்தை பணத்திற்காக விற்கப்பட்ட சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!