தமிழகம்

எழுத நினைக்கும் கதை அப்படியே சினிமாவாக உருவாகும் சூழல் இல்லை. – இயக்குநர் தங்கர்பச்சான் டேட்டி

41views
இயக்குநர் இமயம் பாரதி ராஜா, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், அருவி அதிதி ஆகியோர் நடிப்பில், வீரசக்தி தயாரிப்பில் ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் இயக்கத்தில் கருமேகங்கள் கலைகின்றன சினிமா படபிடிப்பு கடந்த சில மாதங்களாக தென் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இன்னும் சில தினங்களுக்குள் முடிவடையும் படத்தின் இறுதி காட்சிகள் ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட இயற்கை சூழ்ந்த இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. படபிடிப்பு இடைவேளையில், இயக்குநர் தங்கர்பச்சான் கூறியதாவது:
எனது சினிமா வரலாற்றில் 10 படங்களில் நடித்துள்ள நான், 50 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளேன். எழுத நினைத்த கதை அப்படியே சினிமாவாக உருவாக்கும் சூழல் இல்லை. ஆனால் இப்படத்தின் கதை செயற்கை தனம் புனைவுவின்றி, நம்பகத்தன்மையுடன் இருக்கும். யதார்த்த வாழ்க்கையை அப்படியே படமாக்கி வருகிறோம். 150 ஆண்டுகள் கடந்தும் கூட சினிமா இன்னும் நாடகத்தன்மையில் தான் எடுக்கப்படுகிறது என்ற ஆதங்கம் எனக்கு உண்டு.. இந்நிலையை மாற்றி யதார்த்த வாழ்க்கை நிகழ்வுகளை படமாக்கி வருகிறோம். கதையின் கதாபாத்திரத்திற்கேற்ற பொருத்தமான நடிகர்கள் சரிவர அமையாததால் 2006ல் எழுதிய இக்கதை தற்போது படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ராமநாதன் கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா, அவரது மகனாக மற்றொரு இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், மகளாக அருவி அதிதி, நகைச்சுவையில் இருந்து விலகி யோகி பாபு, சிறுமி சாரல் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். எனது முந்தைய பட ஒளிப்பதிவு வட மாநிலங்களில் இருந்தன. தமிழர் கலாசாரம் உட்பட பன்முக தாக்கம் நிறைந்த பண்பாட்டின் அடையாளம் ராமேஸ்வரம், மண்டபம் தனுஷ்கோடி பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இப்படத்திற்கு மக்கள் பிரமாண்ட வெற்றியை தருவர் என நம்புகிறேன். மசாலா படங்களை திரையரங்குகளில் பார்க்கும் மக்கள், நல்ல கதையம்சம் குடும்ப பாங்கு, சமூக சிந்தனை படங்களை சமூக வலைதளங்களில் பார்ப்பதால் தான் பிரமாண்ட வெற்றியை எட்ட இயலாமல் போகிறது. குடும்ப பாங்கு, மசாலா என எந்த வகை படமானாலும் திரையரங்குகளில் சென்று பாருங்கள் வேண்டுகோளையும் வைக்கிறேன் என்றார். இயக்குநர்கள் பாரதி ராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், தயாரிப்பாளர் வீரசக்தி, நடிகை அருவி அதிதி மேனன், ஒளிபதிவாளர் ஏகாம்பரம் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!