தமிழகம்

திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில், ஆதரவற்ற சாலையோர வியாபாரிகளுக்கு ரூபாய் 64 லட்சம் செலவில் 64 சாலையோர வியாபாரிகளுக்காக நவீன தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டது.

101views
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் வசிக்கும் ஆதரவற்ற சாலையோர வியாபாரிகள், சாலையில் மண் தரையில் சுகாதாரமின்றி பழங்கள் , காய்கறிகள் விற்பதை தடுப்பதற்காக, சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை எண்ணி, எவர்சில்வர் உலோகத்தால் ஆன தள்ளு வண்டியை நகராட்சி அலுவலகத்தின் தலைவர் ரம்யா, மற்றும் துணைத்தலைவர் ஆதவன் ஆகியோர் வழங்கினர்.

இதற்கான மொத்த மதிப்பு 64 லட்சம் ஆகும் . இதில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பவர்களும், மாற்றுத்திறனாளி உட்பட பூ விற்கும் தொழிலாளர்களுக்கும் இது போன்ற வாகனங்கள் மிக்க பயனுள்ளதாக அமையும்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!