தமிழகம்

அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில் கார்த்திகை மாதம் நடைபெறும் திருவிழாக்கள் தொடர்பான செய்திக்குறிப்பு

201views
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சொக்கநாதப்பெருமானே (இறைவனே) பல்வேறு அவதாரமெடுத்து 64 திருவிளையாடல்கள் புரிந்த புராதானமான புண்ணிய ஸ்தலமாகும். அருளாளர் நால்வரால் பாடல்பெற்றதும் புதனுக்கு அதிபதியாக விளங்கும் தலமாகவும் தெய்வீக திருமணம் நடைபெற்று அனைவருக்கும் திருமணப்பாக்கியம் கிடைக்க அருள்புரியும் ஸ்தலமாகவும் விளங்குகின்றது.
இத்திருக்கோயிலில் கார்த்திகை மாதம் நடைபெறும் திருவிழாக்கள் விபரம்:-
இத்திருக்கோயிலில் 1432-ஆம் பசலி திருக்கார்த்திகை உற்சவம் 01.12.2022-ஆம் தேதி வியாழக்கிழமை பகல் நாழிகை 10.00 மணிக்கு மேல் 11.00 மணிக்குள் (காலை 10.30 முதல் 10.54-க்குள்) மகர லக்கனத்தில் கொடியேற்றம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து 01.12.2022-ஆம் தேதி முதல் 10.12.2022-ஆம் தேதி முடிய நடைபெறவுள்ளது.
மேற்படி உற்சவம் 10 நாட்களும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை
மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் ஆடி வீதி புறப்பாடாகியும் 06.12.2022 திருக்கார்த்திகை அன்று மாலை திருக்கோயில் முழுவதும் இலட்ச தீபம் ஏற்றப்படும்.
அன்றைய தினம் மாலை 07.00 மணியளவில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி கீழமாசி வீதி சென்று அம்மன் தேரடி அருகிலும் சுவாமி சன்னதி தேரடி அருகில் பூக்கடை தெருவிலும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சிக்கு எழுந்தருள்வார்கள். மேற்படி இரண்டு இடங்களில் சொக்கப்பனை ஏற்றப்படும். எனவே, உபய தங்கரதம். உபய திருக்கல்யாணம் மற்றும் உபய வைரக்கீரிடம் ஆகிய விசேடங்கள் எதுவும் நடைபெறாது என்று அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் துணை ஆணையர்ஃசெயல் அலுவலர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!