தமிழகம்

திருமங்கலம் அருகே 850 கிலோ ஆட்டுக்கறியுடன் அசைவ விருந்து – 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ முனியாண்டி சாமி கோவிலில் நடைபெற்ற மண்டல அபிஷேக விழா.

419views
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கல்லணை கிராமத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த முனியாண்டி சுவாமி திருக்கோயிலில் மண்டல அபிஷேக விழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இது ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம், இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றதால், கும்பாபிஷேகம் முடிந்து 48 நாளில் இவ்விழாவை வைக்க வேண்டும் என்பதால் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான அசைவ உணவு விருந்து படைக்கும் நிகழ்ச்சி திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது . இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் திருக்கோயிலை குலதெய்வமாக வழிபடும் குடும்பத்தினர், ஒன்று கூடி சாமியை வழிபட்டனர் .
இதனை தொடர்ந்து விழா குழுவினர் சார்பாக , 850 கிலோ ஆடுகளை வெட்டி அசைவு உணவு தயாரித்து , குடல் கறி, எலும்பு குழம்பு உள்ளிட்ட பலவகையான முறையில் சமைத்து, திருக்கோவிலுக்கு வரும் 10,000 – க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு விருந்து வைத்து மகிழ்ந்தனர்.

விழாவில், கல்லணை ,கூடக் கோவில் , நெடு மதுரை, கீழக்கோட்டை மேலக்கோட்டை உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!