சூடானில் பேரணி சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு- 8 பேர் பலி
சூடானில் கடந்த 2019-ஆம் ஆண்டு உமர் அல் பஷிர் ஆட்சி அகற்றப்பட்டு ராணுவ ஆட்சி அமைந்தது. அன்று முதல் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது. சூடான் தலைநகர் கார்ட்டமின் இரட்டை நகரமான ஓம்குர் மாரில் இருந்து நேற்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் கையில் அந்தநாட்டு கொடிகளை ஏந்தி பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்,...