வேலூர் அடுத்த காட்பாடியில் 40 சவரன் தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளையில் ஈடுப்பட்ட திருவண்ணாமலையை சேர்ந்த 7 பேர் கைது!!
வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளத்தை சேர்ந்தவர் ராஜா, இவர் இதே பகுதியில் டிபன் கடை நடத்தி வருகின்றார். கடந்த 20-ம் தேதி மகளின் திருமணத்திற்காக துணி எடுக்க சென்னை சென்று அன்று இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட 40 சவரன் தங்க நகை, 500கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. புகாரின்பேரில் காட்பாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது....