archiveசிறுகதை

இலக்கியம்சிறுகதை

மனம் நனைத்துப் போனவள்

இரு பத்து ஆண்டுகளாக அவள் பரிச்ச யம். பார்வைப் பரிச்சயம். பேசிய சொல் ஒன்று கூட இல்லை. முறைத்தபடிதான் பார்ப்பாள். அல்லது பார்த்தால் முறைப் பாள். அவளிடம் பேசும் எண்ணமென எதுவும் இருந்ததில்லை. அவள் தேவதை .. என்றெல்லாம் புரூடா விடத் தயாரில்லை. சாதாரண ஒரு இல்லத்தரசியின் தோற்றச் செழுமை. திடமான உடல். மாநிறம். சிறுகடை ஒன்றில் இருப்பாள். சென்ற மாதம் எதோ வாங்கின போது சடசட வென நிறுத்தி...
சிறுகதை

கடைசியாக ஒரு கவிதை

ததும்பிக் கொண்டிருந்தது சந்தோஷம். எக்கணமும் வழியத் தயாராகி விட்டதைப் போலவும்கூட. கடகடவென பறந்து வந்து அமரும் புறாக்களாக, மனதில் முகிழ்த்த கவிதைக்கான வார்த்தைகள் வந்து கொண்டிருந்தன. பூக்களின் பின்னணியில், வண்ணத்துப் பூச்சிகளின் சிறகடிப்புகளைப் போல உணர்வுகள் நுரைத்துக் கொண்டிருக்க ஜோவிற்கு சிறகுகள் முளைத்திருந்தன. மனதுள் பதிந்து கொண்டிருந்த காட்சிகள், இன்றைக்கென்று அப்படியானதொரு லயத்தில் ஒரு ஸிம்பனிக்கான காட்சிக் கோப்புகளைப் போல அமைந்திருந்தன. அது மழையென்று சொல்ல முடியாத ஊட்டிக்கே உரித்தானதொரு...
சிறுகதை

தென்னூர் தேவதை!

06.11.2021 இன்று காலை திருச்சி தென்னூரில் உள்ள உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்கச் சென்றேன். அங்கிருந்த கடையில் இளநீர் வாங்கி குடித்துவிட்டு, அதில் இருந்த மெல்லிய தேங்காயை தின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கே இளநீர் குடிப்பதற்காக கல்லூரி மாணவி போல் இருந்த ஒரு இளம்பெண் வந்தாள். லட்சுமிகரமான முகம்! அந்தப் பெண் தனக்கு இளநீர் சொல்லிவிட்டு நிற்க, அதே நிமிடம் ஒருவர் வேகமாய் வந்து தனக்கு இளநீர் கேட்டார். உடனே...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்-தொடர் : பகுதி – 44

பள்ளியை விட்டு வீட்டுக்கு சென்றதும், தன் தாயிடம் ரத்தினா காலையில் நடந்தவற்றை கூறுகிறாள். தன்னை அப்பா வேறொரு வீட்டிற்கு கூட்டிச் சென்றதாகவும், உனக்கு இங்கு வேறொரு அம்மா இங்கு இருக்கிறாள் என்றும் கூறியவற்றை தன் தாயிடம் தெரிவிக்கிறாள். அதற்கு தேவி, "இனி உன் அப்பா அங்கு கூட்டிச்சென்றாள், வரமாட்டேன் என்று சொல்லி விடு. அதற்காக ஏன் அழுகிறாய்? வாழ்வில் சில விஷயங்கள் நமக்கு பிடிக்காது, அதற்காக நாம் அழுதோம் என்றால்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 43

வெளியூர் சென்று வீடு திரும்பிய செழியனிடம் வந்ததும், வராததுமாய் எதற்கு "அந்த கார்குழலி இங்கு வருகிறாள். ஏன் எங்களை அவமானப்படுத்த வா???" என்று கேள்வி கேட்ட லட்சுமிக்கு... ஒன்றும் புரியாதவனாய் நின்றான். "அம்மா என்ன ஆயிற்று. எதற்காக அவள் இங்கு வந்தாள். அதெல்லாம் நீயே அவளிடம் கேட்டு தெரிந்து கொள்.இன்னொரு முறை அவள் இங்கு வந்தாள் என்றால் என் மறு உருவத்தை நீ பார்க்க நேரிடும். இதுவே முதலும், கடைசியுமாக...
Uncategorizedசிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 41

கோபத்துடன் வெளியே வந்த தேவியை பார்த்த லட்சுமி என்ன நடந்தது என்று கேட்க............ அதற்கு நடந்தவற்றை கூறுகிறாள் தேவி. உடனே கோபம் அடைந்த லட்சுமி இவர்கள் இருவருக்கும் வாழ்க்கையே கசப்பாக மாறுவதற்கு கார்குழலி தான் காரணம் என்று யோசிக்க ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் கடைக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு, கார்குழலி யின் வீட்டுக்கு சென்று அவள் அம்மாவிடம் சண்டை இடுகிறாள். "அன்றே என் மகனை திருமணம் செய்ய உங்களிடம் பெண்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்- தொடர் : பகுதி- 40

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செழியனை லட்சுமியும், கவிதாவும் கவனித்துக் கொண்டிருந்தனர். மருத்துவமனைக்கு உணவு கொண்டு வந்து தருவதில் தொடங்கி வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் தேவி பார்த்துக்கொண்டாள் குழந்தையை மாமனார் சரவணனிடம் கடையில் கொடுத்து விட்டு மருத்துவமனைக்கு சென்று வருவது வழக்கமாக வைத்துக் கொண்டாள். செழியன் மேலுள்ள கோபத்தினால் செழியன் இருக்கும் அறைக்கு மட்டும் செல்லாமல், வெளியே இருந்து பார்த்து விட்டு வந்தாள். ஒரு மாதம் கழித்து செழியனை வீட்டில்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர்: பகுதி – 39

ஓரிரு நாட்கள் சுயநினைவின்றி காணப்பட்ட செழியன் மூன்றாவது நாள் கண்விழித்துப் பார்க்க அவனைச்சுற்றி அவனது அக்கா, அம்மா, மனைவி ஆகியோர் இவனது கண்விழிப்புக்காக உறங்காமல் காத்துக்கொண்டிருந்தனர். மூவரும் கோபத்துடன் இருக்க எதற்காக இப்படி இருக்கிறார்கள் என்று தெரியாமல் விழிக்கிறான். "செழியா! நீ செய்வது உனக்கு சரியா???" "என்ன சொல்றீங்க அம்மா???" "நான் சொல்வது உனக்கு ஒன்னும் புரியவில்லை அப்படித்தானே!..." "ஆமாம்!" "எதற்கு? நீ கார்குழலி திருமணம் செய்து கொண்டாய். உனக்காக...
சிறுகதை

அழைப்பு மணி!

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி கொண்டிருந்தது. அன்று சனிக்கிழமை மதியம் நேரம் 2.50.... அந்த பிரபலமான ஜவுளிகடைக்கு நானும், மனைவியும் சென்றோம். ஜவுளிகடையின் வாசலின் வெளியே கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த ஒருவர் எல்லோரையும் வரவேற்று கொண்டிருந்தார். குழந்தைகளுக்கு பலூனும், சாக்லெட்டும் கொடுத்து உற்சாகப்படுத்தினார். நாங்களும் அவரை கடந்து ஜவுளிகடைக்குள் நுழைந்தோம். குளிரூட்டபட்ட அந்த பெரிய ஹால், மதியம் வெயிலுக்கு இதமாக இருந்தது. இரண்டாவது மாடியில் மனைவிக்கான புடவையை எடுத்து கொண்டிருந்தேன்....
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி- 38

தேவி கேள்வி கேட்டுக் கொண்டிருக்க........ மௌனமாய் இருந்த கார்குழலி சிறிது நேரத்தில் பேச ஆரம்பிக்கிறாள். "என்னை மன்னித்துவிடு" "நான் என்ன கேட்கிறேன் நீ என்ன பதில் சொல்கிறாய்???" "நீ கேட்பதற்கு தான் நான் பதில் சொல்கிறேன். "என்னை மன்னித்துவிடு" "என்ன சொல்கிறாய்???" "ஆமாம்! நான் செய்த தவறுக்கு தான் மன்னிப்பு கேட்கிறேன். எனக்கும், செழியனுக்கு ம் திருமணம் நடந்துவிட்டது. நான் ஆரம்பத்திலேயே அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று அவரிடம் இந்த...
1 2 3 4 5 7
Page 3 of 7

Right Click & View Source is disabled.

error: Content is protected !!