தீப திருநாள்
தித்திக்கும் தீபாவளி எத்திக்கும் வானவெடி.... காணும் எங்கிலும் கரும்புகைமண்டலம் கார்குழல் உலர்வதாய் கண்டேன் இக்கணம் ஒளியும் ஒலியும் இடியும் மின்னலும் வானுக்கும் மண்ணுக்கும் இடையில் வழக்கமான விழாவின் நடையில் தலை சுற்றும் சங்கு சக்கரம்.. தன்னிலை தீர்ந்ததும் நிற்கும் அக்கணம் பற்ற வைத்த பூத்தொட்டி பூச்சொரிதல்... சூட மறுத்து கூடி நின்று ரசிக்கும் மங்கைய கூட்டம்... சரவெடி சிதறும் நொடி பதறும்படி உதறும் அடி கதறும்படி... தம்பி மத்தாப்பு பிடிக்கும்...