archiveஇலக்கியம்

சிறுகதை

தென்னூர் தேவதை!

06.11.2021 இன்று காலை திருச்சி தென்னூரில் உள்ள உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்கச் சென்றேன். அங்கிருந்த கடையில் இளநீர் வாங்கி குடித்துவிட்டு, அதில் இருந்த மெல்லிய தேங்காயை தின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கே இளநீர் குடிப்பதற்காக கல்லூரி மாணவி போல் இருந்த ஒரு இளம்பெண் வந்தாள். லட்சுமிகரமான முகம்! அந்தப் பெண் தனக்கு இளநீர் சொல்லிவிட்டு நிற்க, அதே நிமிடம் ஒருவர் வேகமாய் வந்து தனக்கு இளநீர் கேட்டார். உடனே...
கவிதை

இளைஞனே… சிந்தி!

திரையினில் ஆடும் நடிகனின் காலில் தீபங்கள் காட்டுகிறாய்! - ஒரு திருவிழாப் போலக் கூடிக்-கொண் டாடித் தெய்வமாய்ப் போற்றுகிறாய்! மரவடி வான மாபெரும் உருவில் பாலினை ஊற்றுகிறாய்! - அட! மடையனே! ஏன்-நீ பெற்றவர் தம்மைச் சோறின்றி வாட்டுகிறாய்! புதுப்படம் வந்தால் முதன்முதல் நாளே புயலெனப் பாய்கின்றாய்! - உள்ள பொறுப்பினை மறந்து, பிழைப்பினைத் துறந்து வெயிலினில் காய்கின்றாய்! மதிப்பிட முடியாப் பொழுதினைக் கொன்று மகிழ்ச்சியைத் தேடுகின்றாய்! - பெரும்...
கட்டுரை

சர்வதேசத்தின் நங்கூரம், இலங்கையின் திருகோணமலை எனும் கம்பீரம்!

சர்வதேச வரலாற்று ஆட்சியாளர்களுக்கு சாட்சிக்கருங்கல் சொரிந்த பின்னும், தனது ஆட்சிச்செதுக்கல்களின் மாட்சிமை மாறாது கரும்பாறைச்சிற்பமாய், குடாக்கடலும், குன்றுமாய், கலையாய், நிலையாய் மறுவற நிலைத்திருக்கிக்கின்ற வீரப்பெருநகரே நம் திருகோணமலை எனும் திருநகர் ஆகும்! படையெடுத்து வந்த அந்நியருக்கும் வீரம் கற்பித்த, மாவீரர் மாண்புகூறும் வரலாறு படைத்த பொன்னகர் இது! 1782 இல் வன்னியைக் கைப்பற்ற முனைந்த டச்சு வீரர்களை, எதிர்த்துத் தாக்கிய திருகோணமலையும் அதனையண்டியதுமான தமிழ்த்தேச மக்களின் போர்த்திறன் பற்றி எழுதிய...
கட்டுரை

தமிழ்வேள் உமாமகேசுவரனார்

தமிழுக்காக பாடுபட்டவர்கள் எண்ணற்றவர்கள் இருந்தாலும் அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவராத நிலை இப்போது இருக்கிறது. தமிழுக்காக தொண்டாற்றியே தன்னுயிரை ஈந்த பல்வேறு அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள் என பலர் இருந்தாலும் தமிழகம் மறக்கக் கூடாத சிலர்களில் தமிழ்வேள் உமாமகேசுவரன் பிள்ளை அவர்களும் ஒருவர். கடந்த 1883 ஆம் ஆண்டு, மே திங்கள் ஏழாம் நாள், கருந்திட்டை எனும் கிராமத்தில் பிறந்தார்கள், பெற்றோர் மிகப் பெரிய செல்வந்தர்கள். காமாட்சி என்ற பெயருடைய அவரது...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்-தொடர் : பகுதி – 44

பள்ளியை விட்டு வீட்டுக்கு சென்றதும், தன் தாயிடம் ரத்தினா காலையில் நடந்தவற்றை கூறுகிறாள். தன்னை அப்பா வேறொரு வீட்டிற்கு கூட்டிச் சென்றதாகவும், உனக்கு இங்கு வேறொரு அம்மா இங்கு இருக்கிறாள் என்றும் கூறியவற்றை தன் தாயிடம் தெரிவிக்கிறாள். அதற்கு தேவி, "இனி உன் அப்பா அங்கு கூட்டிச்சென்றாள், வரமாட்டேன் என்று சொல்லி விடு. அதற்காக ஏன் அழுகிறாய்? வாழ்வில் சில விஷயங்கள் நமக்கு பிடிக்காது, அதற்காக நாம் அழுதோம் என்றால்...
கவிதை

மகளென்னும் தேவதையே

மகள்கள் தினமாம் இன்று.... மகளென்னும் தேவதையே..... வாசித்தேன் ஆசை தீர.... இரசித்தேன் அளவில்லாமல்.... சுவாசித்தேன் உனையே மூச்சாக ஏந்தினேன் உன்னை உயிராக.... கண்டேன் அழகிய உலகம் உன்னில்... மகிழ்ந்தேன் உன் தாயாக.... வாழ்வை வசந்தமாக்கிய அழகு தேவதையே....உன் அன்பு அத்தனையும் தருவாயா எல்லையில்லாமல்.... வாழ்வேன் தொல்லையில்லாமல்...!!! கோமதி, காட்பாடி...
கவிதை

பாரபட்ச தேசம்

இது பாரபட்ச தேசம் அரசால் வந்த நாசம். புண்ணிய பூமி, வெளி வேசம் திருட்டுத்தனத்தில் ஆவேசம். தூய்மை இந்தியா, குப்பைகள் அள்ள குப்பைகளாய் குழந்தைகள் மனதால்துள்ள, பணிவிடை பெற்று இறுமாப்பில் அனுபவிக்கும் செல்வந்தன் நகைத்து எள்ள. உலையில் சோற்பார்த்து தலையில் எண்ணை பார்த்து இடையில் உடைபார்த்து இவைமட்டல்ல, கொடுமைகள் பல பார்த்து விடியலில்லா முகம் பார்த்து. மதமில்லை இனமில்லை தாயில்லை தந்தையில்லை ஓய்வெடுக்க இடவுமில்லை சீரில்லை சிறப்பில்லை பகுத்தாய கல்வியுமில்லை....
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 43

வெளியூர் சென்று வீடு திரும்பிய செழியனிடம் வந்ததும், வராததுமாய் எதற்கு "அந்த கார்குழலி இங்கு வருகிறாள். ஏன் எங்களை அவமானப்படுத்த வா???" என்று கேள்வி கேட்ட லட்சுமிக்கு... ஒன்றும் புரியாதவனாய் நின்றான். "அம்மா என்ன ஆயிற்று. எதற்காக அவள் இங்கு வந்தாள். அதெல்லாம் நீயே அவளிடம் கேட்டு தெரிந்து கொள்.இன்னொரு முறை அவள் இங்கு வந்தாள் என்றால் என் மறு உருவத்தை நீ பார்க்க நேரிடும். இதுவே முதலும், கடைசியுமாக...
கவிதை

வேய்ங்குழலோசை சிரிக்கும் பிள்ளைத்தமிழ்

புள்ளினங்களின் இசையோடு புலரும் அதிகாலையின் அழகில், பூத்துக்குலுங்கும் மலர்களின் புன்னகையில், துள்ளித்திரியும் மான்களின் துறுதுறுப்பில், தோகை விரித்தாடும் வண்ணமயிலின் நடனத்தில், குயிலின் இனிய கானத்தில், ஆர்ப்பரிக்கும் அருவியின் கம்பீரத்தில், சலசலக்கும் ஓடையில் துள்ளிகுதிக்கும் மீன்களின் எழிலில், வெண்பனி இரவின் முழுமதி அழகில், மயக்கும் வேய்ங்குழலோசையில், கள்ளமில்லா பிள்ளைச்சிரிப்பழகில் நின் முகவடிவே கண்டேனடா...... என் மாயக்கண்ணா.......!!! கோமதி, காட்பாடி...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 42

செழியனின் மகள் ரத்தினா 11 வயதில் வளர்ந்து நிற்கிறாள். அவளுடன் அதிகம் நேரம் செலவிட செய்கிறான். இதற்கிடையே கார்குழலி யை திருமணம் செய்ததில் இருந்து தேவிக்கும் செழியனுக்கு மிடையே கருத்து வேறுபாடு அதிகமாக இருந்தது, இருப்பினும் அவள் தன் மகளுக்காக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வந்தாள். செழியன் ரத்தினா வை அன்பாக பார்த்துக் கொள்வது, அவளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பது இது எதுவுமே கார்குழலி பிடிக்கவில்லை, கார்குழலி செழியனிடம் அடிக்கடி...
1 9 10 11 12 13 16
Page 11 of 16

Right Click & View Source is disabled.

error: Content is protected !!